Monday, 27 April 2015

உவமைத்தொடர்


திருக்குறள்


பழமொழி


நன்னூல்


மணிமேகலை


இயற்கை இன்பம்


மரபுத்தொடர்


இரட்டைக்கிளவி


விவேக சிந்தாமணி


உவமைத்தொடர்


திருக்குறள்


தமயந்தி வருகை


சிலப்பதிகாரம்


பழமொழி


நளனது நல்லாட்சி


மரபுத்தொடர்


இரட்டைக்கிளவி


உவமைத்தொடர்

1. வேலியே பயிரை மேய்ந்தாற் போல
   – காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்

2. தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல
   – தன் செயலில் கவனமாயிருத்தல் / குறியாயிருத்தல்

3. இலவு காத்த கிளி போல
   – உறுதியாகக் கிடைக்கும் என்று காத்திருந்து ஏமாற்றம் அடைதல்

4. மலரும் மணமும் போல
   – விட்டுப் பிரியாமை / சேர்ந்தே இருத்தல்

5. ஊமை கண்ட கனாப் போல
   – வெளியே சொல்ல முடியாமை

திருவருட்பா


     ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
     உத்தமர்தம் உறவு வேண்டும்
     உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
     உறவு கலவாமை வேண்டும்
     பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
     பேசா திருக்க வேண்டும்
                                      - இராமலிங்க அடிகள்


பொருள் : ஒரு நெறிப்பட்ட மனத்துடன் நின்னுடைய மலர் போன்ற திருவடிகலை நினைக்கின்ற உத்தமர்களின் உறவே எனக்கு வேண்டும். உள்ளத்திலொன்றும் புறத்திலொன்றுமாகப் பேசும் வஞ்சகர் உறவு என்னை அடையாதவாறு காக்க வேண்டும். பெருமை சான்ற நினது புகழையே நான் பேசுபவனாகவும் பொய்மை மொழிகளைப் பேசாதவனாகவும் இருக்க வேண்டும்.

திருக்குறள்

1.    இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
     ஒழுக்க முடையார்வாய்ச் சொல் ( குறள் 415 )

பொருள் : வழுக்கும் சேற்று நிலத்தில் நடப்பார்க்கு ஊன்றுகோல் உதவுவதுபோல வாழ்க்கையில் வழிதவற நேரும்போது ஒழுக்கமுடையவரின் அறிவுரையானது துணை நிற்கும்.

கருத்து : வாழ்க்கையில் நெறி தவறும் சூழல் நேரும்போது சான்றோரின் அறிவுரை கைகொடுக்கும்.



2.    விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினது
     சொல்லுதல் வல்லார்ப் பெறின்   ( குறள் 648 )

பொருள் : கருத்துகளை முறையாகவும் இனிமையாகவும் சொல்லும் ஆற்றலுள்ளவர் சொன்ன வேலையை உலகத்தார் உடனே செய்வார்கள்.

கருத்து : இனிமையாகப் பேசக்கூடியவர் இடும் வேலையைப் பிறர் உடனே செய்வர்.



3.    உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
     உடையது உடையரோ மற்று     ( குறள் 591 )

பொருள் : ஊக்கம் உடையவர்கள்தாம் செல்வம் உடையவர்களாகக் கருதப்படுவார்கள். ஊக்கம் இல்லாதவர்கள் எவ்வகைச் செல்வங்களைக் கொண்டிருந்தாலும் உடையவர்களாக ஆகமாட்டார்கள்.

கருத்து : ஊக்கம் உடையவர்கள் எல்லாம் உடையவர்கள் ஆவர்.


பழமொழி


1. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
   எச்செயலைச் செய்தாலும் தன் நோக்கத்தில் வெற்றி பெறுவதிலேயே 
   கவனம் செலுத்த வேண்டும்.

2. எறும்பு ஊரக் கல்லும் தேயும்.
   தொடர்ந்து ஒரு செயலைச் செய்து வந்தால் எவ்வளவு கடினமானதாக
   இருந்தாலும் நாளடைவில் எளிதாகிவிடும்.

3. அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது.
   நடந்து முடிந்த ஒரு காரியத்தை அல்லது கைவிட்டுப்போன ஒரு 
   பொருளை நினைத்து வருந்திப் பயனில்லை.

4. அற்ப அறிவு ஆபத்துக்கிடம்.
   நமக்குப் போதிய அறிவு இருத்தல் அவசியம். குறைவான அறிவு 
   ஆபத்துக்கு வழிவகுக்கும்.

5. பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.
   பிள்ளைகள் மீது கொண்ட தீராத அன்பினால், தாய் தன் பிள்ளை 
   செய்யும் எல்லாத் துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு அன்பு 
   காட்டுவாள். ஆனால், பிள்ளைக்குத் தாயைப் போல இளகிய மனம் 
   இருப்பதில்லை.

மரபுத்தொடர்

1. உடும்புப் பிடி  - கொண்ட எண்ணம், கருத்து முதலியவற்றில்
                  உறுதியாக இருத்தல்

2. இடித்துரைத்தல்  - கண்டித்துக் கூறுதல்

3. ஈயாடவில்லை - அவமானத்தால் ஏற்படும் மகிழ்ச்சியின்மை

4. தலை வணங்குதல் - உரிய முறையில் மதித்தல் / மதிப்புத் தருதல்

5. காணல் நீர்  -  நிறைவேறாத எண்ணம்

இரட்டைக்கிளவி

1. சிலுசிலு     குளிர்ச்சித்தன்மை
           எ.கா : கேமரன் மலையில் சிலுசிலு என வீசிய மென்குளிர்க் 
                  காற்று உடலைச் சிலிர்க்கச் செய்தது.

2. பரபர        அவசர அவசரமாகச் செய்தல்
           எ.கா : தாமதமாக எழுந்த செந்தில் பரபர எனக்  
                 காலைக்கடன்களை முடித்துப் பள்ளிக்கு ஓடினான்.

3. துருதுரு      எப்பொழுதும் துடிப்பாகச் செயல்படுதல்
           .கா : துருதுரு என அங்குமிங்கும் ஓடியாடிக் 
                  கொண்டிருக்கும் குழந்தைகளைக் கவனமாகப்
                  பார்த்துக்கொள்ள வேண்டும்.

4. தளதள      பயிர் செழிப்பாகக் காணப்படும் நிலை
           எ.கா : நன்கு நீருற்றி உரமிட்ட மல்லிகைச் செடிகள் தளதள
                 எனச் செழிப்பாக வளர்ந்திருந்தன.

இணைமொழி

1. சீரும் சிறப்பும்           மேன்மை / உன்னத நிலை / ஏற்றம் மிகுந்த

2. ஏழை எளியவர்          வறியவர் / பொருளாதாரத்தில் நலிவுற்றவர்

3. ஊண் உறக்கம்           உணவும் தூக்கமும்

4. ஈடு இணை              ஒப்பு

5. அடக்க ஒடுக்கம்         பணிவு

அறநெறிச்சாரம்

     எப்பிறப் பாயினும் ஏமாப் பொருவற்கு
     மக்கட் பிறப்பில் பிறிதில்லை – அப்பிறப்பில்
     கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
     நிற்றலும் கூடப் பெறின் முனைப்பாடியார்

பொருள் : மனிதப் பிறப்பில் கற்க வேண்டியதைக் கற்க வேண்டும். கற்றறிந்த அறிஞர்களின் அரிய கருத்துகளைக் கேட்க வேண்டும். கேட்ட கருத்துகளின்படி வாழ்க்கையில் நடக்கவும் வேண்டும். இவ்வாறு செய்வதன்வழி உலகில் உள்ள மற்ற எந்தப் பிறப்புகளையும்விட மனிதப் பிறப்புச் சிறப்பானதாகவும் பாதுகாப்பானதாகவும் அமையும்.








Sunday, 26 April 2015

உவமைத்தொடர்


திருக்குறள்


பழமொழி


நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்


நாலடியார்


மரபுத்தொடர்


இரட்டைக்கிளவி


இணைமொழி


உவமைத்தொடர்


மூதுரை


மரபுத்தொடர்


இரட்டைக்கிளவி


பழமொழி


திருமுறை


இணைமொழி


திருக்குறள்




வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி




வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி




வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!

வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழிய வே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையக மே!

தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நா டே!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!

மலேசிய தமிழ் வாழ்த்து




மலேசிய தமிழ் வாழ்த்து


காப்பியனை ஈன்றவளே! காப்பியங்கள் கண்டவளே!
கலைவளர்த்த தமிழகத்தின், தலைநிலத்தில் ஆள்பவளே!
தாய்ப்புலமை யாற்புவியில், தனிப்பெருமை கொண்டவளே!
தமிழரொடு புலம்பெயர்ந்து, தரணியெங்கும் வாழ்பவளே!


எங்களெழில் மலைசியத்தில், சிங்கைதனில் ஈழமண்ணில்
இலக்கியமாய் வழக்கியலாய், இனக்காவல் தருபவளே!
பொங்கிவளர் அறிவியலின், புத்தாக்கம் அத்தனைக்கும்
பொருந்தியின்று மின்னுலகில், புரட்சிவலம் வருபவளே!


செவ்வியலின் இலக்கியங்கள், செழித்திருந்த பொற்காலம்
சேர்த்துவைத்த செயுள்வளத்தில், செம்மாந்த பழையவளே!
அவ்வியலில் வேரூன்றி, அறிவுயர்ந்த தற்காலம்
அழகழகாய் உரைநடையும், ஆளுகின்ற புதியவளே!


குலங்கடந்து நெறிகடந்து, நிலவரம்பின் தடைகடந்து
கோமகளாய்த் தமிழர்மனம், கொலுவிருக்கும் தமிழணங்கே!
நிலவினுக்கே பெயர்ந்தாலும், நினதாட்சி தொடருமம்மா!
நிறைகுறையாச் செம்மொழியே, நிலைபெறநீ வாழியவே!