எ.கா : கேமரன் மலையில் சிலுசிலு என
வீசிய மென்குளிர்க்
காற்று உடலைச் சிலிர்க்கச் செய்தது.
2. பரபர – அவசர
அவசரமாகச் செய்தல்
எ.கா : தாமதமாக எழுந்த செந்தில் பரபர
எனக்
காலைக்கடன்களை முடித்துப் பள்ளிக்கு ஓடினான்.
3. துருதுரு –
எப்பொழுதும் துடிப்பாகச் செயல்படுதல்
எ.கா : துருதுரு என அங்குமிங்கும் ஓடியாடிக்
கொண்டிருக்கும் குழந்தைகளைக் கவனமாகப்
பார்த்துக்கொள்ள
வேண்டும்.
4. தளதள –
பயிர் செழிப்பாகக் காணப்படும் நிலை
எ.கா : நன்கு நீருற்றி உரமிட்ட
மல்லிகைச் செடிகள் தளதள
எனச் செழிப்பாக வளர்ந்திருந்தன.
No comments:
Post a Comment