ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசா திருக்க வேண்டும்
- இராமலிங்க அடிகள்
பொருள் : ஒரு
நெறிப்பட்ட மனத்துடன் நின்னுடைய மலர் போன்ற திருவடிகலை நினைக்கின்ற உத்தமர்களின்
உறவே எனக்கு வேண்டும். உள்ளத்திலொன்றும் புறத்திலொன்றுமாகப் பேசும் வஞ்சகர் உறவு
என்னை அடையாதவாறு காக்க வேண்டும். பெருமை சான்ற நினது புகழையே நான் பேசுபவனாகவும்
பொய்மை மொழிகளைப் பேசாதவனாகவும் இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment