Monday, 27 April 2015

பழமொழி


1. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
   எச்செயலைச் செய்தாலும் தன் நோக்கத்தில் வெற்றி பெறுவதிலேயே 
   கவனம் செலுத்த வேண்டும்.

2. எறும்பு ஊரக் கல்லும் தேயும்.
   தொடர்ந்து ஒரு செயலைச் செய்து வந்தால் எவ்வளவு கடினமானதாக
   இருந்தாலும் நாளடைவில் எளிதாகிவிடும்.

3. அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது.
   நடந்து முடிந்த ஒரு காரியத்தை அல்லது கைவிட்டுப்போன ஒரு 
   பொருளை நினைத்து வருந்திப் பயனில்லை.

4. அற்ப அறிவு ஆபத்துக்கிடம்.
   நமக்குப் போதிய அறிவு இருத்தல் அவசியம். குறைவான அறிவு 
   ஆபத்துக்கு வழிவகுக்கும்.

5. பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.
   பிள்ளைகள் மீது கொண்ட தீராத அன்பினால், தாய் தன் பிள்ளை 
   செய்யும் எல்லாத் துன்பங்களையும் பொறுத்துக் கொண்டு அன்பு 
   காட்டுவாள். ஆனால், பிள்ளைக்குத் தாயைப் போல இளகிய மனம் 
   இருப்பதில்லை.

No comments:

Post a Comment