Monday, 27 April 2015

திருக்குறள்

1.    இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
     ஒழுக்க முடையார்வாய்ச் சொல் ( குறள் 415 )

பொருள் : வழுக்கும் சேற்று நிலத்தில் நடப்பார்க்கு ஊன்றுகோல் உதவுவதுபோல வாழ்க்கையில் வழிதவற நேரும்போது ஒழுக்கமுடையவரின் அறிவுரையானது துணை நிற்கும்.

கருத்து : வாழ்க்கையில் நெறி தவறும் சூழல் நேரும்போது சான்றோரின் அறிவுரை கைகொடுக்கும்.



2.    விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினது
     சொல்லுதல் வல்லார்ப் பெறின்   ( குறள் 648 )

பொருள் : கருத்துகளை முறையாகவும் இனிமையாகவும் சொல்லும் ஆற்றலுள்ளவர் சொன்ன வேலையை உலகத்தார் உடனே செய்வார்கள்.

கருத்து : இனிமையாகப் பேசக்கூடியவர் இடும் வேலையைப் பிறர் உடனே செய்வர்.



3.    உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
     உடையது உடையரோ மற்று     ( குறள் 591 )

பொருள் : ஊக்கம் உடையவர்கள்தாம் செல்வம் உடையவர்களாகக் கருதப்படுவார்கள். ஊக்கம் இல்லாதவர்கள் எவ்வகைச் செல்வங்களைக் கொண்டிருந்தாலும் உடையவர்களாக ஆகமாட்டார்கள்.

கருத்து : ஊக்கம் உடையவர்கள் எல்லாம் உடையவர்கள் ஆவர்.


No comments:

Post a Comment